பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி லூசி வெளியேற உத்தரவு: கிறிஸ்தவ திருச்சபை அடாவடி

திருவனந்தபுரம்:

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய கிறிஸ்தவ பிஷ்ப் பிராங்கோ மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், அவருக்கு எதிராக போராடிய  கன்னியாஸ்திரியை, கிறிஸ்தவ அமைப்பு சபையை விட்டு வெளியேறி உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி புகார் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிஷப் ஃபிராங்கோ கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.  இந்த வழக்கின் விசாரணை நிலுவையில்உள்ளது. இந்த விவகாரத்தில், பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாஸ்திரி லூசி

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பல முறை தன்னை 13 முறை  வன்புணர்வு செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக கேரள மாநில காவல்துறை அவர்மீது விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தது.

அதைத்தொடர்ந்து  பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, பிஷப் பிராங்கோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  போராட்டம் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  செயின்ட் மேரி தேவாலயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசி பங்கேற்றதால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணி களில் ஈடுபடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் பிஷப் ஃபிராங்கோ

இதற்கிடையில், சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு நடத்திய பெண்கள் சுவர் போராட்டத்துக்கு ஆதரவாக பிராங்கோவால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவும் அதிருப்தி அடைந்த கிறிஸ்தவ திருச்சபை, அவருக்கு விளக்கம் அளிக்க கோரியது. அவரும் பல முறை விளக்கம் அளித்தும்,  அதை ஏற்க மறுத்து, திருச்சபையில் இருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அவராக வெளியேற வில்லை என்றால், கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என்றும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தன்னை திருச்சபையை விட்டு வெளியேற உத்தரவிட்ட கிறிஸ்தவ நிர்வாகத்தின் உத்தரவு  குறித்து கூறிய கன்னியாஸ்திரி லூசி கூறும்போது,  தனது  17 வயதில் இந்த தேவாலயத்திற்கு வந்து சேவையாற்றி வருகிறன். கிறிஸ்தவ மதக்கொள்கையின் படி, வழிகாட்டுதலின் படியும் தான் வாழ்ந்துவருகிறேன்.

என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு  சரியான விளக்கத்தை தெரிவித்து விட்டேன். ஆனால், திருச்சபை என்னை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது என்றார்.

கிறிஸ்தவ திருச்சபையின்  இந்த உத்தரவு  கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட வேண்டும் என்று பெண்களை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bishop Franco, Kerala Bishop sex harrasment, Nun Lucy, Sister Lusi
-=-