சென்னை: தமிழ்நாட்டில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு வேலைக்கு பதிவு செய்து, காத்திருப்போர் எண்ணிக்கை 67.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2023 பிப்ரவரி மாத கணக்கீட்டின் படி ஏறத்தாழ 67லட்சத்து 50ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 பேரில், 31 லட்சத்து 47 ஆயிரத்து 605 பேர் ஆண்களும், 36 லட்சத்து 07 ஆயிரத்து 589 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களில் 272 பேரும் பதிவு செய்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளில் 1லட்சத்து 45ஆயிரத்து 814பேரும், 18வயதுக்குட்பட்டவர்களில், 18லட்சத்து 74ஆயிரத்து 522பள்ளி மாணவர்களும், 19முதல் 30வயதுக்குட்பட்ட வர்களில் 28லட்சத்து 09ஆயிரத்து 940கல்லூரி மாணவர்களும் 31முதல் 45வயதுக்குட்பட்டவர்களில் 18லட்சத்து 34ஆயிரத்து 217பேரும், 46முதல் 60வயதுக்குட்பட்டவர்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5,811 பேரும் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.