சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 63.41 லட்சமாக உள்ளது.

இகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட விவரங்கள் வருமாறு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 41,639 ஆகும். அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 15,432.

19 வயது முதல் 23 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்கள் 11 லட்சத்து 28,412 பேர் உள்ளனர். 24 வயது முதல் 35 வயது உள்ளவா்கள் 22 லட்சத்து 83,209 பேரும், அதற்கு மேற்பட்ட வயதினா் 11 லட்சத்து 5,761 பேரும் இருக்கின்றனர். 58 வயதுக்கு மேற்பட்டோர் 8,825 போ் உள்ளனர்.

இதேபோன்று மாற்றுதிறனாளிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நவம்பர் 11ம் தேதி புள்ளிவிவரப்படி ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 252 பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.