டில்லி

ந்த வருடம் வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை குறித்து நேரடி வரித்துறை வாரிய மையம் தகவல் அளித்துள்ளது.

சென்ற கணக்கு வருடமான 2018-19 ஆம் ஆண்டுக்கான வரிக்கணக்குகள் தாக்கல் செய்தவர்கள் குறித்த விவரங்களை நேரடி வரித்துறை வாரிய மையம் வெளியிட்டுள்ளது.   இந்த தகவலின்படி வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சுமார் 20% அதிகரித்துள்ளதை ஏற்கனவே நாம் அறிந்துக் கொண்டுள்ளோம்.  தற்போது மேலும் விவரங்களை அறிந்துக் கொள்வோம்.

இந்த ஆண்டு வருமான வரி செலுத்தியோர் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 13.8% அதிகரித்துள்ளது.  இந்த எண்ணிக்கை தற்போது 8.45 கோடியை எட்டி உள்ளது.   அதாவது சென்ற வருடம் சுமார் 8.45 கோடிப் பேர் வருமான வரி செலுத்தி உள்ளனர்.   வரி செலுத்துவோர் எண்ணிக்கை என்பது கணக்கு அளித்தோர் மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு கணக்கு அளிக்காமல் உள்ளவர் ஆகிய இரு பிரிவினரும் அடங்கியதாகும்.

இந்த வருடத்தில் ஜிஎஸ்டி வருமானமும் சேர்ந்துக் கொண்டதால் நேரடி வரி வருமானம் 52.5% லிருந்து 55% ஆக அதிகரித்துள்ளது.   மொத்தத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரி வருமானம் 7.25% அதிகரித்துள்ளது.   தற்போது கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த வரி வருமானம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் மொத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமான வரிக்கணக்குகள் சென்ற வருடத்தை விட 22% அதிகரித்துள்ளன.