சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியாரிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, வீட்டுக்குள் வரும் பெரியாரிஸ்டுகளை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் தடிகளுடன் தயாராக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் போராட்டக்காரர்களால் இசிஆர் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன நெரிசல் மற்றும் போராட்டம் காரணமாக அந்த பகுதி மக்களும், பணிக்கு சென்றவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், போராட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதி வழங்கயிது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
பொதுவாக எதிர்க்கட்சிகளின் மக்கள் நல போராட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், பெரியார் விஷயத்தில் 30 அமைப்புகள் இணைந்து வந்து ஒருவரின் வீட்டை முற்றுகையிடப் செல்வதை எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை. கடைசி நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஒருவேளை இதை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால், பெரும் களேபரம் நடைபெற காரணமாகி இருக்கும்.
பெரியார் குறித்து பேசிய நாம் தமிழ்ர் கட்சி தலைவர் சீமான், அதுகுறித்து ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் இல்லையேல், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என பெரியார் ஆதரவு குழுவினர் போராட்டம் அறித்தனர். ஆனால், அதை ஏற்க சீமான், தனது கருத்தில் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனால், பெரியாரிஸ்டுகளான, பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், பெரியார் ஆதரவு அமைப்பினர் சீமான் வீட்டை முற்றுகையிட சென்றனர்.
இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களும், அங்கு சாரை சாரையோக செல்லத் தொடங்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சி தொண்டர்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தி காவல்துறையினர், அவர்களை திருப்பி அனுப்பினர். சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் பெரியாரிய உணர்வாளர்கள் காவதுறையின் தடுப்பை மீறி காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். அதை தடுத்ததால், சீமான் உருவ பொம்மையை எரித்தும் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். . மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இதை வீட்டிற்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சீமான் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கையில் தடியுடன், பெரியாரிஸ்களை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். இதனால் அந்த பகுதி பதற்றமாக காணப்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
வீடியோ உதவி: நன்றி – புதிய தலைமுறை