சென்னை

ளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அவர் இந்த புகாரில் தனக்குச் சீமான் கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், சீமான் மீது கொலை மிரட்டல், மோசடி, உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.   பிறகு, காவல்துறை நடத்திய விசாரணையின்போது தான் அவசரப்பட்டு, பிறர் பேச்சைக் கேட்டு புகார் கொடுத்துவிட்டதால் இந்த புகாரைத் திரும்பப் பெறுவதாக விஜயலட்சுமி எழுதிக்கொடுத்தார்.

பிறகு விஜயலட்சுமி பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். தனது புகாரை திரும்பப் பெற்று விட்டுச் சென்ற விஜயலட்சுமி, தற்போது சீமானுக்கு எதிராகப் பேசி வருகிறார்.

நடிகை விஜயலட்சுமி மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நாம் தமிழர் கட்சித் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  மனுவில் சீமானையும் நாம் தமிழர் கட்சியினரையும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு மிரட்டுவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.