டெல்லி:  இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை இன்று (12ந்தேதி) வெளி யிட்டது. அதன்படி, ஹால்டிக்கெட் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் (டவுன்லோடு)  செய்துகொள்ளலாம்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இன்று தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை  தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதன்படி, https://neet.nta.nic.in/download-admit-card-for-neet-ug-2022-is-live-now/   என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நீட் தேர்வு, ஜூலை 17ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.