புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.  ஆளும் காங்கிரஸ தலைமையிலான கூட்டணி, என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி என இரு அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இன்றைய வாக்கு எண்ணிக்கையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக, அதிமுக கூட்டணி 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.