புதுச்சேரி:

புதுச்சேரி மக்களவைத் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஒரே மக்களவை தொகுதியை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.


இந்நிலையில், ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி மக்களவை தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, மீண்டும் என்.ஆர்.காங்கிரஸுக்கே புதுச்சேரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைப் பொருத்தவரை, காங்கிரஸ் தொடர்புடைய கட்சிகளுக்குத் தான் செல்வாக்கு அதிகம். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்தவர்தான்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டதால், மீண்டும் ராதாகிருஷ்ணனே போட்டியிடுவாரா? அல்லது வேறு ஒருவர் போட்டியிடுவாரா? என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
புதுச்சேரி மக்களவை தொகுதி, என்.ஆர்.காங்கிரஸ்,