பிரதமர் மோடி இம்மாதம் டிஸ்கவரி சேனலில் வெளியாக உள்ள ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது மோடி ஆவணப்படப்பில் பிசியாக இருந்ததை எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Modi

இம்மாத இறுதியில் டிஸ்கவரி சேனலில் ஆவணப்படம் ஒன்று ஒளிப்பரப்பப்பட உள்ளது. அந்த ஆவணப்படத்தில் இமயமலைக்கு சென்ற போது ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களை பிரதமர் மோடி பகிர்ந்துக் கொள்கிறார். இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நடைபெற்ற படப்பிடில் மோடி பங்கேற்ற புகைப்படங்கள் உள்ளூர் செய்திகளில் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பிற்காக பிப்ரவர் 14ம் தேதி காலை 7 மணிக்கு விமானம் மூலம் உத்தரகாண்ட் சென்ற மோடி ஜிம் கார்பெட் தேசிய பூங்காவை அடைந்துள்ளார். அதன்பிறகு ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பு மோடியை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு பிற்பகல் வரை நீடித்துள்ளது. படப்பிடிப்பின் போது ஜிம் கார்பெட் பூங்காவின் அதிகாரிகளை சந்தித்த மோடி, புலிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்ததுடன் அவற்றை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

அதன்பிறகு பார்வையாளர்களின் புத்தகத்தில் கையொப்பமிட்ட மோடி, ‘இந்த இடத்திற்கு வருவது சந்தோஷம் அளிக்கும்” என எழுதினார். அதன்பின்னர் அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதமர் மோடி புலிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கு ஒப்புளிதல் அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

அதே நாளில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவடத்தில் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் உத்ராகாண்ட்டில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.

சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிசியாக இருந்ததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ”புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று மதியம், ஒட்டுமொத்த நாடே இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

ஆனால் பிரதமர் மோடியோ, ஜிம் கார்பெட் பூங்காவில் மாலை வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த உலகத்தில் இதுபோன்ற பிரதமர் எங்காவது இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.