சென்னை

ற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகடும் என்று தெரிவித்திருந்தது.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி , மீனம்பாக்கம் , ஆலந்தூர் , அசோக் நகர் , ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

[youtube-feed feed=1]