விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2019: இறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்

Must read

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்து, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இங்கிலாந்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் ஆடவருக்கான அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் ராபர்டோ பாட்டிஸ்டா அகத்தை எதிர்கொண்டார். இப்போட்டியில் தொடக்கம் முதில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜோகோவிச், முதல் செட்டை 6 – 2 என்று கைப்பற்றினார்.

இரண்டாம் செட் தொடங்கியதில் இருந்து ஸ்பெயினை சேர்ந்த ராபர்டோ பட்டிஸ்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். இதனால் இந்த செட்டை 4 -6 என இழந்த ஜோகோவிச், மூன்றாவது செட்டில் கூடுதல் கவனம் செலுத்தி 6 – 3 என்று எளிதாக வென்றார்.

போட்டியின் கடைசி செட்டில் ஜோகோவிச் – ராபர்டோ பட்டிஸ்டா இடையே கடுமையான போட்டி நிலவி வந்தபோதும், 6 – 3 என்று போட்டியை தன்வசப்படுத்தியதோடு, இறுதி போட்டிக்கும் நோவாக் ஜோகோவிச் முன்னேறினார்.

More articles

Latest article