அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி.

பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போன்று இதுவும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசி என்பதும் அமெரிக்காவில் விநியோகிக்கப்பட இருக்கும் நான்காவது தடுப்பூசி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் இந்த தடுப்பூசி அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் சுமார் 30,000 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் 90 சதவீதம் செயல்திறனை நிரூபித்துள்ளதன் அடிப்படையில், இந்த மருந்தை மக்களுக்கு பயன்படுத்த அனுமதிகோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் அடுத்த சிலமாதங்களில் தயாரிப்பை தொடங்க உள்ள இந்த நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 முதல் 15 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.