உலகின் நம்பன் ஒன் விரரான நோவக் ஜோகோவிக் 7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ரபேல் நடாலை 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி ஜொகோவிக் வெற்றிப்பெற்றார்.
கிராண்ட்ஸ்லாம் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைப்பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் வீரரான நோவக் ஜோகோவிக் மற்றும் 2வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.
போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிக் 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி 7வது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார். அதுமட்டுமின்றி
அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையையும் ஜோகோவிக் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிக் தனது 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜோகோவிற்கு அடுத்ததாக ரோஜர் பெடரர் மற்றும் ராய் எமர்சன் 6 முறை ஆஸ்திரேலியன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.