கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

Must read

சென்னை:
ல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்; பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொன்று முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலமாக கல்வியைப் பயின்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பல 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் இயங்காத நிலையில் ஆன்லைன் மூலமாக கல்வியில் நடைபெற்று வருவதால் பள்ளியின் பராமரிப்பு, மின்சாரம், வாகனம் செலவுகள் இல்லை இதனால், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை எட்ட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்; பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொன்று முடிவு எடுக்கப்படும் கூறினார்.

More articles

Latest article