இறப்பிலும் துரத்தும் “செல்லாது” நடவடிக்கை!

Must read

நெட்டிசன்:
கே.பி.பி. நவீன் (Kbb Naveen) அவர்களின் முகநூல் பதிவு:
18 இரவு 11:30…ஊரிலிருந்து என் பெரிய அத்தை இறந்த செய்தி..
கையில..4 நூறு ரூபாய் நோட்டுக்கள்…மட்டுமே கையிருப்பு…அந்த

நேரத்தில்..நண்பர்களிடம் கேட்கவும் யோசனை…கோடீஸ்வரன் என ஒருவனை நம்பி கேட்டும் அவனிடம் ஆயிரம் மட்டுமே கையிருப்பு…சரி அன்று மாலை- இரவு கூட ஏ.டி.எம் க்கு சுற்றியதிலும் இன்னும் சரியாகாத மொபைல் நெட்வொர்க்கினாலும்..
அதிகாலை 4 மணியிலிருந்து… 7 மணி வரை ஒரு ஏ.டி.எம்மை தேடி…அலைந்து…கடைசியில்…ஐ.சி.ஐ.சி.ஐ..யின் ஒரு கிளையில் கியூவை பார்த்து…கியுவில் நின்று என் கார்டு & மனைவி கார்டு என 4000 ரூபாய்…எடுத்து ..9 மணி மதுரை பஸ் பிடித்து …
4:20 மணிக்கு மேலூரில் ..இறங்கி…ஒரு டாக்ஸி பிடித்து கிட்டத்தட்ட 130 கி.மீ.ஸ்பீடில்…சிவகங்கை.. இதற்கிடையில்..செல் போன் மூலம் அப்டேட் வந்து கொண்டே இருந்ததால்.. நேராக…மயானத்துக்கே சென்றடைந்தேன்..நான் ஒருவன் கடைசியாக முகம் பார்க்க வேண்டும் என…கிட்டத்தட்ட…ஒரு மணி நேரம் இறுதி சடங்கு முடித்து… காத்திருந்தார்கள்…நான் பார்த்து முடித்த அடுத்த சில நிமிடங்களில் பஸ்பமாகி போனார் கஸ்தூரி அத்தை…
நான், என் குழந்தைகளை வளர்த்தெடுத்த ஒரு பெரிய மனுஷியின் கடைசி நிமிடங்களில் பங்கு கொண்ட நிம்மதியுடனும்…!
43 நாட்களாகியும்..
ஒரு இந்தியனை இறப்பில் கூட துரத்தும்…இந்த பண வர்த்தனையை கொண்டு வந்த முட்டாள் மோடி அரசையும்… நொந்து கொண்டே….மீண்டும் ஊர் திரும்பினேன்.

More articles

Latest article