சென்னை: ஆன்லைன் கல்வி மூலம் ஒண்ணுமே புரியவில்லை என்று, சென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்  ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சிவகங்கையில்,  முதல்வர் எடப்பாடியிடம் பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்  நிகழ்ந்துள்ள நிலையில், சென்னையில்,  மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது சோகத்தை அதிகப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நீட் தேர்வு பயத்தால் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்படுவது புரியவில்லை என்று மாணவ சமுதாயத்திடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பல கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்கள், ஏதோ ரோபோட் போல பாடங்களை வாசித்து செல்வதால், பலருக்கு பாடம் குறித்து ஏதும் புரிய மறுக்கிறது. மேலும்,  சந்தேகம் நிவர்த்தி செய்ய முடியாத சூழல் உள்ளது.

இதனால், தேர்வில் மதிப்பெண் முடியாது என்ற அச்சத்தில் மாணாக்கர்களின் தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.

சென்னை மேடவாக்கம் பகுதியில், சேர்ந்த 14 வயது மாணவனான கார்த்திக் என்பவர், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கல்வி புரியவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்த நிலையில், இதன் காரணமாக கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.

இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த  அந்த பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் தொடர் மரணம் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.