சென்னை:  தமிழ்நாட்டில் இதுவரை இயல்பை விட 4% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அடுத்த 10 நாட்களில், இயல்பைவிட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளர்.

அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பு அளவான 317 மி.மீட்டரை விட 330 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்றும்,  நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையான காலத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் முதல் இரண்டு வாரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை உள்பட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை குறைந்து குளிர் வாட்டி வதைத்தது. மேலும் பனிப்பொழிவும் இருந்தால், வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்தது. இருந்தாலும் டெல்டா மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் நவ.17 முதல் 23ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடக்கத்தை விட குறைந்துள்ளது. குறிப்பாக 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை. இனி வரும் நாட்களை பொறுத்தவரையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றார்.

மேலும், அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பு அளவான 317 மி.மீட்டரை விட 330 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்றும்,  நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையான காலத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.