சிவகங்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த   நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வடகிழக்கு பருவமழை தீவிரம்: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில்,  நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்ருது வருகிறது.

அதுபோல, திருச்சி மற்றும் தேனி மாவட்டம் போடி, கோடாங்கிபட்டி, முந்தல், குரங்கணி, தேவாரம் உள்பட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர், நாகை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

இலங்கை கடற் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.  இதனால் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார்.