வாஷிங்டன்

வடகொரியா நாட்டுக்கு சென்று அமெரிக்க அதிபர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்த்தியது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத சோதனையால் கடும் அதிருப்தி நிலவி வந்தது. அணு ஆயுத சோதனைகளுக்கு ஐநா சபை எச்சரிக்கை விடுத்த பிறகும்வட கொரியா அணு ஆயுத சோதனையை நிறுத்தவில்லை. அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. அதன் பிறகு இரு நாட்டு அதிபர்களும் அறிக்கை போர் நடத்தினார்கள்>

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் இந்த இரு அதிபர்களை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சந்திக்க வைத்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பதற்றமான சூழல் தணிந்தது. வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தியது. அடுத்த கட்டமாக டிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு வியட்நாமில் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த சந்திப்பு பாதியில் முறிந்தது.

சமீபத்தில் ஜபான் நாட்டில் ஒசாகா நகரில் நடந்த ஜி 20 மாநாட்டில் டிரம்ப் கலந்துக் கொண்டார். அந்த சமயத்தில் டிரம்ப் இந்த மாநாட்டை முடித்து தமது நாட்டுக்கு செல்லும் போது வட கொரிய அதிபர் அவர் நாட்டில் இருந்தால் அவரை சந்தித்து ஹலோ சொல்ல விரும்புவதாக டிவிட்டரில் பதிந்தார். இதற்கு வட கொரியா சம்மதம் தெரிவித்தது.

இதை ஒட்டி நேற்று ஜப்பானில் இருந்து தனி விமானம் மூலம் பாங்க்முன்ஜன் பகுதியில் உள்ள டிரூஸ் கிராமத்துக்கு டிரம்ப் வந்தார். அங்கு வட கொரிய அதிபர் மற்றும் தென் கொரிய அதிபரை டிரம்ப் சந்தித்து பேசினார். வட கொரிய எல்லைக்குள் சிறிது நடந்து சென்ற டிரம்ப் அதன் பிறகு கிம் ஜாங் உன் உடன் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார்.

அதை ஒட்டி டிரம்ப், “நான் வட கொரிய நாட்டுக்கு சென்றதால் அந்நாட்டு மகள் ஆனந்த கண்ணிர் சிந்தி உள்ளனர். எனது வருகை அந்நாட்டினருக்கு பெரும் மகிழ்வை அளித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.