பியோங்கியாங்

மெரிக்க அதிபருடன் எங்கு வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்த த்யார் என வடகொரியா கூறி உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஆகியோர் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.  தென் கொரியாவுடன் ராணுவ அணிவகுப்பு நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டதால் வட கொரியா கோபம் அடைந்தது.

அதை ஒட்டி இந்த பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக வட கொரியா மிரட்டியது.  வட கொரியாவின் மிரட்டலுக்கு அஞ்சாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த பேச்சு வார்த்தையை நடத்தப் போவதில்லை என நேற்று அறிவித்தார்.

தற்போது வட கொரியா மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபருடனான பேச்சு வார்த்தையை எந்த இடத்தில்  வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக கூறி உள்ளது.