துபாய்

க்கிய அரபு அமீரகத்தில் மணம் புரிந்துக் கொண்ட் 15 நிமிடங்களில் மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாய்.   இங்கு வசிக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞருக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆனது.   இங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே உள்ள வழக்கப்படி பெண்ணின் தந்தைக்கு மகர் என்னும் பெயரில் மணமகன் பணம் வழங்க வேண்டும்.   அதை ஒட்டி இந்த மணமகன் 10000 திர்ஹாம் தர ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமண ஒப்பந்தத்தின் படி  இஸ்லாமிய திருமண சட்ட அலுவலகத்தில் 5000 திர்ஹாமும் திருமணம் முடிந்து வெளியே வந்த உடன் மீதி 5000 திர்ஹாம் பணத்தை அனைவர் முன்னிலையிலும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.   அதன் படி அலுவலகத்தில் 5000 திர்ஹாம் கொடுத்த மணமகன் மணம் முடித்து வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த உடன் மீதிப் பணத்தை மாமனார் கேட்டுள்ளார்.  மணமகன் பணத்தை தனது காரில் வைத்திருப்பதாகவும் பிறகு எடுத்து வந்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.   ஆனால் மாமனார் உடனடியக பணம் தேவை என அனைவர் முன்னிலையிலும் தகராறு செய்துள்ளார்.   இது மணமகனுக்கு கோபத்தை அளித்தது.

அதனால் அந்த மணமகன், “என்னை இவ்வாறு நீங்கள் அவமானப் படுத்துவது தவறு.   இப்படி அவமானம் செய்பவரின் மகளுடன் நான் வாழ விரும்பவில்லை” எனக் கூறி அங்கேயே மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.   மணம் முடிந்து 15 நிமிடங்களிலேயே இவ்வாறு மணமுறிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.