சென்னை: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை பெரிய நாள். கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். நவம்பர் 9-க்குப் பிறகு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலம்முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆட்சியாளர்கள் அதிரடி நடவடிக்கை காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் மழை குறைந்துள்ளது. அவ்வப்போது தூறல் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், தனியார் வானலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை பெரிய நாள் டுட்டி, ராமந்தபுரம், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர்,தென்காசி, புதுக்கோட்டை அனைத்தும் மழைக்கு ஹாட்ஸ்பாட்டில். இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள், மத்திய உள் மாவட்டங்கள் திருச்சி, சேலம் கரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

மேலும், வடசென்னையில் மாலைக்கு பின் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். 30 நிமிடத்தில் மொத்தமாக 60 மிமீ மழை பெய்ய எல்லாம் வாய்ப்பே இல்லை. எனவே ஆங்காங்கே பெய்யும் சிறிய அளவிலான மழைகள் பெய்யும். ஆனால், இந்த மழை  எல்லாம் கண்டிப்பாக அச்சுறுத்தும் மழையாக இருக்காது.

சென்னையில் இன்று சூரியன் தென்படும். அதே சமயம் இடை இடையே ஆங்காங்கே மழை பெய்யும். நாகை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வெதர்மேன், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது என்றவர்,  நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துஉள்ளார்.