சென்னை:
வடசென்னை மக்கள் நெருக்கம்  அதிகம் உள்ள பகுதியாம்… அதனால்தான் கொரோனா பரவுகிறதாம்… வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி என இப்போதுதான் மாநகராட்சி ஆணையருக்கு தெரிய வந்துள்ளதுபோல…
மிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஷாகின் போராட்டம் நடத்திய வடசென்னையின் ராயபுரம்  பகுதியில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவி உள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள பாரதி கல்லூரியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திர வாகனங்களில் அலாரத்துடன் கூடிய அவசரகால விளக்கு பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. அதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.
வடசென்னை பகுதி மக்கள் நெருக்கம்  அதிகம் உள்ள பகுதி என கண்டுபிடிக்க இவருக்கு இத்தனை காலம் பிடித்துள்ளது.  ஆணையரின்  மக்கள் பணி புல்லரிக்க வைக்கிறது…
மேலும் அவர் கூறியதாவது,  “வட சென்னையின் பல பகுதிகளில்  மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக இருக்கிறது. இதனால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடைகளுக்குச் செல்லும்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். “
சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு‌.வி.க. நகர் மண்டலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 மண்டலங்களுக்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஐபிஎஸ் அதிகாரிகள், 10 கோட்டாட்சியர்கள் , 10 மருத்துவ வல்லுநர்கள் என 40 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் எந்தெந்த பகுதிகளில் அதிகமாக தொற்று இருக்கிறது என்பதை ஆராய்ந்து அங்கு புதிய உத்திகளைக் கையாள இருக்கிறோம்.

இதுவரை மொத்தம் மாநகராட்சியின் 19 துப்புரவு பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைவரும் இளம் வயதினர். அவர்களுக்கு இந்த நோய் தொற்றுக்கான அறிகுறிகளே இல்லாமல் தொற்று வந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது இன்று முதல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய அளவில் தமிழகத்தில் ஒப்பிடும் பொழுது குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எண்ணிக்கையானது 8 மடங்கு அதிகம். சென்னை மாநகராட்சியில் 10லட்சம் பேருக்கு 4000 மாதிரிகள் எடுக்கப்படுகிறது.
சென்னையில் நோய் பற்றிய அதிகரிப்பதற்கான காரணம், குறுகிய பரப்பளவில் அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25000 – 50000 க்கும் மேல் வசிப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.
தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் zinc மற்றும் vitamin C மாத்திரைகள், கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  ஆங்காங்கே கை கழுவுவதற்கான ‘வாஷ் பேசின்’ ஏற்படுத்தியுள்ளோம்.
தூய்மைப் பணியாளர்கள், விடுகளில் நோய்த் தொற்று குறித்து கணக்கெடுப்பவர்களுக்கு பிபிஇ கிட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
கபசுர குடிநீரும் இந்த பகுதிகளில் வழங்கப்படுகின்றது.
மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அடிப்படையான பாதுகாப்புகளைக் கடைபிடித்து அரசின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
தென்சென்னையில் 4-5 தடை செய்யப்பட்ட பகுதிகளை விடுவிக்க இருக்கிறோம்.
பாதிப்பு அதிகம் உடைய 3 மண்டலங்களுக்குக் கூடுதல் கிருமி நாசினி வாகனங்களை அளித்துள்ளோம்.
சுகாதாரப் பணியாளர்களை ‘அவுட் சோர்சிங்’ முறையில் பணியமர்த்துகிறோம். கூடுதல் பணிகளுக்காக லேப் டெக்னீஷியன்களையும் பணியமர்த்தவுள்ளோம்.
சென்னையில் நேற்று மட்டும் 2,000 பேருக்குப் பரிசோதனை செய்துள்ளோம். அறிகுறிகள், தொடர்பில் உள்ளவர்களை பரிசோதிக்கிறோம். தொடர்பில் இல்லாதவர்களை ரேண்டமாக பரிசோதிப்பதில் அர்த்தமில்லை”
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிக்காமால் இயங்கும் வங்கி அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை தனிமைப்படுத்துதலுகாக பயன்படுத்தப்படும்”
இவ்வாறு  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையரின் இன்றைய பேட்டி அவரது அறியாமையை அம்பலப்படுத்தி உள்ளது…
நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் கடந்த ஆண்டு (2019 பிப்ரவரி மாதம் 16ந்தேதி நியமிக்கப்பட்டார். (நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார்)
அவரது நியமனத்துக்கு பிறகுதான் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. 
சுமார் 14 மாதங்களுக்கும் மேல் அவர் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் நிலையில், தற்போதுதான் வட சென்னை,  மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என்று கண்டுபிடித்துள்ளதுபோல பிதற்றியுள்ளார்.
சென்னையில்தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியான வடசென்னை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என அனைத்து தரப்பினருக்கும் தெரியும்.
ஆனால், அங்கு தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகஅரசு, இன்று வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் அதனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது  என்று குறைகூறி வருகிறது.
நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டிய மாநகராட்சியும், தமிழக அரசும் தங்களது கடமையில் இருந்து விலகியதால்தான் இன்று வடசென்னை பகுதி கொரோனாவால் சூழப்பட்டுள்ளது.  ஆனால், மக்கள் நெருக்கம் என்று ஜல்ஜாப்பு கூறி மாநகராட்சி ஆணையர் தனது கடமையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.
மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், மாநகராட்சி ஆணையர் தனது பதவியில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம்…
அதுபோல, மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  முதல்வரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம்…
இதை விடுத்து மக்கள் மீது குற்றம் சுமத்துவதும், புலம்புவதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு வலு சேர்க்காது…
இனிமேலாவது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் , ஆக்கப்பூர்வமான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள் அதிகாரிகளே….