சென்னை: முதல்வர் படம் பொறிக்கப்படாத பைகளில் ரேசன் கடைகளில் 14வகை மளிகை பொருட்கள் விநியோகம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு வழங்கும் மளிகை சாமான்கள் அடங்கிய பையில், அரசியல் கட்சிகளின் அடையாளமோ, முதல்வர் படமோ இல்லாமல் தமிழகஅரசு முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளதை கண்டு மக்கள் வியந்து வருகின்றனர். ஸ்டாலின் அரசின் கட்சி சார்பற்ற நடவடிக்கை மக்களியே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரேசன்கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ரூ.4000ம் உடன் மளிகை பொருட்களும் வழங்கப்படும்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக ரூ.2ஆயிரம் கடந்த மே மாதமே வழங்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள ரூ.2ஆயிரம் உடன் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுங்பபு 15ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்,  வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரே‌ஷன் கடைகள் மூலமாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் மூலம் மளிகை பொருட்கள் வழங்கும்பணி தொடங்கியது.

நிவாரண உதவி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு ரே‌ஷன் கடைகளில் இன்று காலையிலேயே வரிசை காணப்பட்டது. முககவசம், சமூக இடைவெளிகளை பின்பற்றி பொதுமக்கள் இதனை வாங்கி சென்றனர். மளிகை பொருட்கள் தொகுப்பு அடங்கிய பைகளை கண்ட பொதுமக்கள் வியப்படைந்தனர். அந்த பையில் அரசியல் தொடர்பான எந்தவித அறிவிப்புகளோ, முதல்வர் ஸ்டாலின் படமோ இடம்பெறாமல் இருந்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. தமிழகஅரசின் அரசியல் சார்பற்ற நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ரூ.2ஆயிரம் உடன் மளிகை தொகுப்பை வாங்க ரேசன் கார்டுகள் வைத்துள்ள  சார்ந்தவர்கள் யாராவது ஒருவர் வந்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது கைரேகை அவசியம் இல்லை, ஸ்மார்ட் கார்டு மற்றும் டோக்கன் கட்டாயம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.