அறிவாலயம் கலைஞர் அரங்கத்திலும்  அசைவத்துக்கு அனுமதி இல்லை!

Must read


சென்னை:

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் கலைஞர் மண்டபடத்தில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இதனால் இஸ்லாமியர் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்படுவதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்துவருகிறார். இதில் பேசிய ரஜினி, “மதுரை, சேலத்தில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கிடாவெட்டி கறியும், சோறும் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் இந்த ராகவேந்திரா மண்டபத்தில் அசைவத்துக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்தார்.

இது சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

“பல திருமண மண்டபங்களில் அசைவ விருந்துக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது, “சைவ உணவே உயர்ந்தது.. அசைவம் தாழந்தது. அசைவம் உண்பவர்கள் கீழ்த்தரமாவர்கள் என்கிற தறான கண்ணோட்டத்தின் வெளிப்படாதுதான்” என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், “பிராமண மனநிலையே இதுபோன்ற எண்ணத்துக்குக் காரணம். சாதிப்பாகுபாட்டின் வெளிப்பாட்டினாலேயே அசைவம் உண்பவர்களை தாழ்ந்தவர்கள் என நினைக்கிறார்கள்” என்றும் பலர் விமர்சிக்கிறார்கள்.

அதோடு, “ரஜினி ரசிகர்களில் அனைத்துத் தரப்பினரும் உண்டு. பல்வேறு சாதி மதங்களைச் சேர்ந்த அவர்களில் பெரும்பாலோர், அசைவம் உண்ணக்கூடியவர்களாகவே இருப்பார்கள். இந்த நிலையில், அசைவத்துக்கு தனது ராகவேந்திரா மண்டபத்தில் அனுமதி இல்லை என்று தெரிவித்ததில் இருந்து, அசைவம் சாப்பிடும் பின்தங்கிய வகுப்பினரை ரஜினி  அவமானப்படுத்தியிருக்கிறார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள், “ராகவேந்திரா திருமண மண்படத்தை அறக்கட்டளைக்கு ரஜினி கொடுத்துவிட்டார். அதன் நிர்வாகிகள் அசைவ விருந்தை அனுமதிப்பது இல்லை. தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலாக முன்னிறுத்தப்படும் தி.மு.க.வின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்திலும் அசைவம் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு இஸ்லாமியர் விழாக்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. பகுத்தறிவு பேசும் கட்சியின் தலைமையக வளாகத்தில் இருக்கும்.. அக்கட்சியின் அறக்கட்டளையின் கீழ் வரும்.. அக் கட்சியின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் பெயரில் செயல்படும் மண்டபத்திலேயே இதுதான் நிலை  ” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாம், அண்ணா அறிவாலய வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்க நிர்வாகியிடம் இது குறித்து விசாரித்தோம்.

“மண்டப வாடகை ஒரு நாளைக்கு 6 லட்ச ரூபாய். ஆனால் அசைவம் சமைக்கக்கூடாது. அதற்கு அனுமதி இல்லை” என்று கலைஞர் அரங்க நிர்வாகி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் மத ரீதியாக யாருக்கும் அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஆனால் மண்டபத்தில் அசைவம் சமைக்கக் கூடாது என்பது கட்டாய நிபந்தனை என்றும் பதில் வந்தது.

இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “இஸ்லாமியர்களில் கணிசமானோர் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. தி.மு.க.வின் முக்கிய பொறுப்புகளிலும் இஸ்லாமியர் உண்டு. ஆனாலும் இவர்கள் இல்ல திருமணங்களை கலைஞர் அரங்கில் நடத்தமுடிவதில்லை. ஏனென்றால் இஸ்லாமியர் இல்ல நிகழ்ச்சி என்றாலே அசைவம்தான் பிரதானம். அது அவர்களது பாரம்பரியம். ஆகவே கலைஞர் மண்டபத்தில் தங்களது குடும்ப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் அதைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்பது உண்மையே” என்றனர்.

மேலும், “தவிர்க்க முடியாத சூழலில் இஸ்லாமிய பிரமுகர்களின் இல்ல விழா இங்கு நடந்தால், வெளியிலிருந்து அசைவ உணவை வாங்கி வந்து பரிமாறியதும் நடந்திருக்கிறது” என்றும் கூறப்படுகிறது.

More articles

1 COMMENT

Latest article