சென்னை:

நீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என்று நடிகர் கமல்ஹாசன் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியும், விருப்ப மனு விநியோகிப்பதாக அறிவித்தது. அதன்படி வரும்  28ம் தேதி முதல்  மார்ச் 7ந்தேதி ( 07/03/2019)  வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்றும், போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர்  பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கான கட்டணம்  ரூ.10 ஆயிரம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதியதோர் தமிழ் நாட்டை உருவாக்க விழை வோர் இவ்விருப்ப மனுவைப் பெற்றுக்கொள்ளலாம். மாற்றத்தை விரும்புவோர் இவ்விருப்ப மனுவில், ‘தான்’ தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம். அல்லது, தமக்கே அத்தகுதிகள் இருப்பதாய் நம்புபவர் இம்மனுவை சமர்பிக்கலாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 234 தொகுதிகளில் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற கூடிய வாய்ப்பு இருப்பதாகவும்,  ஆனால் அது பற்றி உறுதியளிக்க முடியாது என்று கூறி உள்ளார். அதே வேளையில், ரஜினி முதலில் கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.