மதுரை:

டாஸ்மாக் தொடர்பான வழக்கில்,  மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது?  என்று சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஏற்கனவே கடந்த விசாரணையின்போது, jமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்,  இன்றைய விசாரணையின்போது,  மேலும் பல்வேறு கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும்  அரசு  மதுபான கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, மதுரை உயர்நீதி மன்றத்தில்,  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,   தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மார்ச் 4ந்தேதி  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபானம் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கினால் என்ன  என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை  பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றலாமா என்பது குறித்தும் அரசுக்கு  கேள்வி விடுத்தது.

மேலும்,  டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களை மூடுவது குறித்தும் தமிழக அரசு விரிவாக  மார்ச் 12ந் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.