1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரக உயிரினங்களின் சடலங்களை மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் காட்சிப்படுத்தினார்.

மெக்ஸிகோ அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட சடலங்கள் மனிதர் அல்லாத வேற்றுகிரக உயிரினம் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற ஓர் உயிரினம் நமது பூமியில் இல்லை என்று கூறிய பத்திரிகையாளரும் UFO ஆராய்ச்சியாளருமான ஜெய்ம் மௌசான் இந்த இரண்டு சடலங்களும் பெரு நாட்டில் உள்ள குஸ்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த உயிரினத்தின் டி.என்.ஏ.வில் மூன்றில் ஒரு பங்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த 1000 ஆண்டு பழமையான வேற்றுகிரக உயிரினங்களின் சடலங்கள் எப்படி ரகசியமாக மெக்ஸிகோ கொண்டுவரப்பட்டது என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இருந்தபோதும் , மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த இரண்டு சடலங்களும் வேற்றுகிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டு (UFO) ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.