டில்லி:

ந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்தியா காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்து உள்ளது.

2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று 3 பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. இதில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜியும் ஒருவர். இவருடைய பொருளாதார ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வரும் அபிஜித்தின்  2வது மனைவி எஸ்தருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுஉள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித்துக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், நோபல் பிரைஸ் வென்ற அபிஜித் அகில இந்திய காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்து உள்ளது.

அதில், வறுமை ஒழிப்பில்  அபிஜித் பானர்ஜியின்   நம்பமுடியாத பணிகள் நம் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளன. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் காங்கிரஸ் கட்சி வழங்கிய பொருளதார வளர்ச்சி (NYAY) திட்டத்திற்கு ஒரு முக்கிய ஆலோசகராக இருந்தார் என்பதையும்  நினைவு படுத்தி உள்ளது.