ஸ்டாக்ஹோம்:

இந்தியாவின் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பெருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக  ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, இயற்பியல், மருத்துவம், அமைதி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று  2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, இந்தியாவை பூர்வமாக கொண்டு,  அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்குபகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

“உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக” பரிசு மூவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தியரான அபிஜித் பானர்ஜி, லண்டனில் பிறந்தவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.