உத்தரகாண்ட் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்த பணிகளுக்கு 20 சதவீத கமிஷன் வாங்கப்பட்டு வந்தது அதிலிருந்து பிரிந்த உத்தரகாண்ட் மாநிலத்திலும் அதே 20 சதவீதம் கமிஷனாக வாங்கப்படுகிறது என்று அதில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லை என்ற போதும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு ஒப்பந்த வேலைகளுக்கு கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்ற நிலை இருந்து வருவது மோடி நேர்மையானவர் என்று கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கு சவாலாக உள்ளது.

ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஒப்பந்தங்களை 40 சதவீதம் கமிஷன் கேட்டு தொல்லை கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்வதும் ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதும் நடந்து வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் விவகாரம் பாஜக ஆட்சியின் அலங்கோலத்தை படம்பிடித்து காட்டுவதாக உள்ளது.