மும்பை

சிவசேனா கட்சியின் மேலவை உறுப்பினர் மனீஷா கயாண்டே இன்னும் இரு வருடங்களுக்கு காஷ்மீருக்கு யாரும் சுற்றுலாபயணம் செல்லக்கூடாது என கூறி உள்ளார்.

புல்வாமா தற்கொலைப் படை  தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   இதற்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமாகும்.   இதற்கு உலகத் தலைவர்களும் நாடெங்கும் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாத இயக்கங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினரான சிவசேனா கட்சியின் மனீஷா கயாண்டே, “காஷ்மீர் மாநிலம் உலகில் பேரழகு வாயந்த ஒரு இடமாகும்.   அந்த மாநில மக்களுக்கு வருவாய் சுற்று;லாப்பயணிகள் மூலமே கிடைத்து வருகிறது.,    நாடெங்கும் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் காஷ்மீருக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.

ஆனால் அந்த சுற்றுலா வருமானத்தைக் கொண்டு அவர்கள் இந்திய ராணுவத்துக்கு எதிராக செயல்படுகின்றனர்.    தீவிரவாதிகளை தாக்க வரும் ராணுவத்தினர் மிது கல்லெறி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை உள்ளூர் மக்கள் தப்பி ஓட உதவுகின்றனர்.    நமது பணத்தின் மூலமே அவர்கள் நமக்கு எதிராக நடக்கின்றனர்.

எனவே நான் அனைத்து மக்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.   இரண்டு வருடங்களுக்கு காஷ்மீர் மாநிலத்தில் யாரும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம்.   அவர்களுடைய வருமானம் இதனால் பாதிக்கப்படும்.   வருமானம் தேவை என்றால் அமைதி தேவை என்பதை அவர்கள் உணர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.