புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த டில்லி முதல்வர்! கவர்னருக்கு எதிராக இணைந்து போராடும் என உறுதி

Must read

டில்லி:

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை  நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யுனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு வழங்கப்படும் அதிகாரத்தை ரத்து செய்ய நாங்கள் இணைந்து போராடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.

வர்னர் கிரண்பேடிக்கு எதிராக, கவர்னர் மாளிகை முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வருக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அவரோடு அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக தீவிர ஆதரவாளரான கிரண்பேடி கவர்ன ராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து,  மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.  இதன் காரணமாக மாநில அரசுக்கும் கவர்னருக்கு இடையே  மோதல் நிலவி வருகிறது. மக்கள் நிலத்திட்டகளுக்கு அனுமதி வழங்க மறுத்து வருவதால், மக்கள் நலப்பணிகள் முடங்கி  பாதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13ந்தேதி முதல் முதல்வர் நாராயண சாமி கவர்னர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தார். அவருடன் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இணைந்து தர்ணா செய்து வருகின்றனர்.

முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. நாராயண சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாடு முழுவதும் உள்ள உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டில்லி முதல்வர் நாராயணசாமி இன்று புதுச்சேரி வந்து முதல்வர் நாராயண சாமிக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார்.  நாராயணசாமியுடன் அமர்ந்து போராட்டம் குறித்து பேசிய கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, கவர்னரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி போராடுகிறார். அவருக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் உள்ளனர் என்றவர், இதுபோன்று யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு வழங்கப்படும் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும், இது மக்களுக்கு செய்யும் அநீதி என்றவர், அதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசினர். அதைத்தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”துணைநிலை ஆளுநர் இருக்கை என்பது சிறியது. அந்த இருக்கைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். நாடு மிகப்பெரியது. மக்கள் தான் எஜமானர்கள். இதை கிரண்பேடி புரிந்துகொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசு வந்தாலும் இதே கோரிக்கையை வலியுறுத்துவோம், டெல்லி, புதுச்சேரி முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் முழு அதிகாரத்துடன் இருக்க வேண்டும். மக்களுக்காகவும், அவர்கள் உரிமைக் காகத்தான் போராடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

”ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் போட்டியிட்டு மோசமான தோல்வியை எங்களிடம் அடைந்தவர். தேர்தலில் தோல்வியடைந்தவர் ராஜ்நிவாஸில் ஆளுநராக அமர்ந்து ஆட்சி புரிகிறார். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தர்ணாவில் உள்ளனர்.

ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடான விஷயம். கிரண்பேடி மக்களுக்கு வேலை செய்யவில்லை. மோடிக்காக வேலை செய்கிறார். மோடிக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்.

புதுச்சேரி, டெல்லி துணைநிலை ஆளுநர்கள் மக்களால் தேர்வான அரசுக்கு எதிராக சதி செய்து பணி செய்ய விடாமல் மக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தவே அனுப்பப்பட்டுள்ளனர். அப்பணியில் முயல்கின்றனர். புதுச்சேரி போல் டெல்லியிலும் இதே பிரச்சினைதான்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் புதுச்சேரி, டெல்லிக்கு இன்னும் ஜனநாயகம் கிடைக்கவில்லை. இதர மாநிலங்களில் முழு அதிகாரமுள்ளது. இருமாநிலங்களில் அதுபோல் இல்லை. முழு மாநில அந்தஸ்து தருவது அவசியம். இரு மாநில முதல்வர்களும் இணைந்து போராடுவோம்”.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

ஏற்கனவே நாராயணசாமி போராட்டம் குறித்து டிவிட் செய்திருந்த   டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமிசாலையில் படுத்து தூங்கும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். இது எந்த வகையான ஜனநாயகம்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article