இந்தியாவின் அமைதியை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் அந்நாட்டுக்கு காய்கறி ஏற்றுமதி செய்வதில்லை என்று குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

tomato

தக்காளி, மிளகாய், எலுமிச்சை போன்ற காய்கறிகள் குஜராத்திலிருந்து பெருமளவு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் கிட்டத்தட்ட ரூ.3 கோடி பெறுமானமுள்ள காய்கறிகள் ஏற்றுமதி ஆகின்றன. இவை 50 டிரக்குகளில் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த 1997 முதல் இந்த வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் முதல்முறையாக இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் தினமும் 3 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் எங்கள் சுயநலனைவிட நாட்டு நலமே முக்கியம் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். இது பாகிஸ்தானுக்கு நல்ல பாடமாக அமையும். அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு இந்தியாவுடன் நல்லுறவு பேணும்போதுதான் எங்கள் வியாபாரத்தை நாங்கள் மறுபடி தொடருவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் வங்கதேசம், வளைகுடா நாடுகள், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுடன் எங்கள் வணிகம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.