டில்லி:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைப் பார்க்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி வானதி சீனிவாசன் இந்த தகவலை கூறி உள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை)  சென்னை வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் அப்பல்லோ மருத்துவமனை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
modi1
கடந்த மாதம் 22-ந் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல் குறித்து தினசரி அறிக்கை மூலம் விவரித்து வருகிறது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
இருந்தாலும் முதல்வர் பற்றிய வதந்தி அடிக்கடி வருவதால் கட்சி தொண்டர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இதன் காரணமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என கவலை கொள்கிறார்கள்.
இதற்கிடையில் முதல்வரின் உடல்நிலையை பரிசோதிக்க லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே வந்து சென்றார். அதையடுத்து டில்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் கொண்டு குழு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்தும், தற்போது அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்து, மேற்கொண்டு கொடுக்க வேண்டிய சிகிச்சை குறித்தும் ஆலோசனை செய்து சென்றார்கள்.
அதே நேரத்தில் பெரும்பாலான  அரசியல் கட்சித் தலைவர்கள்  அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென நேற்று சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தது அரசியல் கட்சியினிரிடையே  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக முதல்வரின் நெருங்கிய நண்பரான மோடி இன்னும் வந்து முதல்வரை பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் கட்சி தொண்டர்களிடையே நிலவி வந்தது.
ஏற்கனவேமுதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.  உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி உடனே வந்து, எம்.ஜி.ஆரை கண்டு, மேல்சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல ஆவன செய்வேன் என்று கூறி சென்றதை நினைவு கூர்ந்த அதிமுகவினர்,
பிரதமர் மோடி இதுவரை வராதது சந்தேகத்தை வரவழைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலில் சம்மதித்துவிட்டு, பின்னர் முடியாது என்று தமிழகத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கூறியதையும் நினைவு கூர்ந்த அதிமுகவினர்,
மத்திய அரசு, தமிழக அரசு விசயத்திலும், முதல்வர் விசயத்திலும் ஏதோ அரசியல் விளையாட்டை அரங்கேற்ற துடிக்கிறது என்று சந்தேகம் வலுத்துள்ளதாக கருதுகிறார்கள்.
modi_1931180f
ஆனால்,  அதிமுகவுடன் கடந்த பல ஆண்டுகள் கூட்டணி வைக்காத காங்கிரஸ் கட்சியின்  துணைத் தலைவர் ராகுல் வந்து பார்த்து சென்றது, அதிமுகவிலும், அரசியல் கட்சிகளிடையேயும்  பல்வேறு யூகங்களையும் கிளப்பிவிட்டுப் போனது. இதன் காரணமாக அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சனம் எழுந்துள்ளது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியையும் சென்னைக்கு வரவேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி நாளை சென்னை வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக  இன்று காலை முதலே சென்னை அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் வழக்கத்தைவிட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.