சென்னை:
ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடை முறையை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர் ஆசிரியர் பணி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.இந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தவறு செய்யும் அரசு ஊழியர்களைத் தடுக்கவும் அவர்களைச் சீர்படுத்தவும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கையை இறுதி செய்தவுடன், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை விதிக்கப்படுகிறது. சில சமயங்களில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை ஒழுங்கு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இழுத்தடிக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதில் இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க, தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், சத்துணவு சமையலர்கள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் ஆகியோரது ஓய்வூதியம் பெறக் கூடிய வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் இடைநீக்கம் நடைமுறை நீக்கப்படுவதையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel