சென்னை: கொரோனா தொற்று பரவல் குறைந்த மாவட்டங்களில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், தொற்று அதிகம் உள்ளதால், தளர்வு அளிக்கப்படாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும்.
மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை.
ஆன்லைன் கல்வி , கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடம் நடத்துவது தொடர்ந்து நடைபெறும்
தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளது; 27 மாவட்டங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்;
தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.