சென்னை: செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இன்று காலை முதல் தனது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் சிறை வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தரப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
செல்வபெருந்தகையை ராகுலின் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக, செல்வபெருந்தகை கூறுவது உண்மையில்லை. அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.
செல்வப் பெருந்தகை வீட்டுப் பக்கமாக வருமான வரித்துறையினர் சென்று வேறொரு இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]