திண்டிவனம்: ஜெய்பீம் பட விவகாரம் சர்ச்சைக்குளாக்கி உள்ள நிலையில், இன்று பாமக கட்சி நிர்வாகிகள் கூட்டம் திண்டிவனத்தில் நடை பெற்றது. இதில், பாமக தலைவர்  ராமதாஸ் இன்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில்  பேசும்போது,  தேர்தலில் போட்டியிடக்கூட ஆளில்லையே என விரக்தியுடன் பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பாமக தலைவர் ராமதாஸ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தால், சாலையோரங்களில் கட்சிக்கொடிகள் கட்டப்பட்டு,  பாதாதைகள் அமைத்து ராமதாஸ்-க்கு வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. சாலையின் இருபுறங்களில் ஏராளமான பாமகவினர் திரண்டு வந்து, ராமதாஸ்-ஐ வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து உரையாற்றிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், உள்ளாட்சி தேர்தலில் பாமகவினர் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு விலை போனதால்தான், பாமக தோல்வி அடைந்தது என்றும், தேர்தலில் போட்டியிடக்கூட ஆள் இல்லை என்று கூறியவர், இதுபோன்ற நிலை நீடித்தால் இனி கட்சி நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 3வது பெரியாக உள்ள பாமகவில் தேர்தலில் போட்டியிடவே ஆள் இல்லை என கூறுவது நமக்கு வெட்கக் கேடு விரக்தியாக பேசியவர், தொடர்ந்து, பாமக மற்றும் தற்போதைய அரசியல் சர்ச்சைகள் குறித்தும் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.