திமுகவில் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது – திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்

Must read

சென்னை:
ன்னை திமுகவிலிருந்து எவராலும் பிரிக்க முடியாது என்று சட்டமன்றஉறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினறும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.

ஆகையால் என்னை கழகத்திலிருந்து தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியும் இது போன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article