சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் தமிழக தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனி, ஞாயிறு வேட்புமனு தாக்கல் கிடையாது; என்றவர், வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும்போது வரவேண்டும் எனறவர், தேர்தல் குறித்து 1950 என்ற 24 மணி நேர தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

இன்று செய்தியளார்களிடம் பேசிய சாகு,   வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்  என்று கூறியவர்,  சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது, இது தொடர்பாக,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை  76 மையங்களில் எண்ணப்படும்.

வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி

சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது

 

 வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள், ஊடகங்கள், அரசியல் கட்சியின் வலைத்தளங்களில் உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் 

வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், வாக்குப்பதிவு முடியும் முன் 3 வெவ்வேறு நாளில் விளம்பரம் செய்ய வேண்டும் 

 வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்

வாக்காளர் தகவல் சீட்டில், வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

கொரோனா காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வாக்களிக்க வேண்டும்.

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் கவச உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.