சென்னை:
புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியோகோவ் வகை கொரோனா வௌவாலில் இருந்து வௌவாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களைப் பகிர வேண்டாம். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.

கொரோனா மூன்றாவது அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்

சின்னம்மையை எப்படி வீழ்த்தினோமோ அதேபோல இந்த கொரோனா தொற்றையும் வீழ்த்துவோம்; புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.