HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில் இது கொரோனா வைரஸ் போன்று வேகமாகப் பரவக்கூடும் என்ற கவலை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எச்.எம்.பி.வி. வைரஸின் தற்போதைய வடிவத்தில் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வகை வைரஸில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் வரை இதில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்ககேத்கரை மேற்கோள் காட்டி நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.
ஆய்வுகளின் அடிப்படையில், 4% முதல் 15% மக்கள் தங்கள் இரத்த மாதிரிகளில் HMPV க்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளது. “இந்திய மக்கள், குறிப்பாக 5 மற்றும் 65 வயதுக்குட்பட்டவர்கள், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது குறிக்கிறது.
இது மற்ற பொதுவான காய்ச்சலைப் போலவே பரவுகிறது, மேலும் எதிர்பார்க்கப்படும் வெடிப்பு என்று அழைக்கப்படுவதற்கு எதிராக நாம் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டுள்ளோம்” என்று கங்காகேத்கர் கூறினார்.
2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது, HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் (Pneumoviridae family) சேர்ந்தது. அதே குடும்பமான சுவாச ஒத்திசைவு வைரஸ் (Respiratory Syncytial Virus) என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.
இது பொதுவாக இருமல், காய்ச்சல், சளி அல்லது மூக்கில் அடைப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒருசிலருக்கு இதனால் மூச்சு திணறல் ஏற்படலாம்.
HMPV வைரஸ் பல ஆண்டுகளாக உள்ளபோதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் H1N1 போன்ற பிற வைரஸ்களாலேயே அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது முதன்மையாக நோயெதிர்ப்பு சக்தி குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது.
இதற்கு முன் சீனாவில் கோவிட்-19 டிசம்பர் மாதம் குளிர்காலத்தில் பரவியதை அடுத்து தற்போது HMPV வைரஸ் பரவலும் அதே குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வைரஸ் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான நபர்களுக்கு அரிதாகவே நிமோனியா ஏற்படுகிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.