சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புதிய வகை கொரோனா வைரசால் மூன்றாவது அலையில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் அதனால் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சிங்கப்பூரில் பரவி வருவது புதிய வகை வைரஸ் அல்ல என்றும் இது ஏற்கனவே உள்ள வைரஸ் தான் என்றும் விளக்கமளித்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளிடம் தங்கள் கவலையை வெளியிட்ட சிங்கப்பூர் அரசுக்கு “கெஜ்ரிவால் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேச முதல்வர் மட்டுமே அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை” என்று இந்திய அரசு தரப்பு
தெரிவித்துள்ளது.