சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு  வழங்கினார் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்  ஸ்டாலின்.

கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும்  ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து, முதலில் சென்னை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், மருந்து வாங்குவதற்கு தினமும் ஏராளமான மக்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிய தொடங்கினர். இதனால் தொற்று பரவல் ஏற்பட்டதால், மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும்,  19ந்தேதி முதல் முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இன்று  தனியார் மருத்துவமனைகளுக்கு  ரெம்டெசிவிர் மருந்து வழங்குதலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசிடம் ரெம்டெசிவிர் தேவை குறித்து பதிவு செய்திருந்த 343 தனியார் மருத்துவமனைகளிவ்ல முதல் கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 மருந்துக் குப்பிகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இதை ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.