டில்லி

நாடெங்கும் இனி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறாது எனவும் நேரடி தேர்வு மட்டுமே நடைபெறும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை மூடப்பட்டன.   பல்கலைக்க்கழகங்க மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.  நேரடியாக நடைபெறும் எழுத்துத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  நாடெங்கும் அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.  கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப் பல்கலைக் கழகங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்நிலையில் பல்கலைக்கழக மானிய கழகம் (யுஜிசி) செயலர் ரஜ்னீஷ் ஜெயின் இன்று ஒரு கடிதத்தை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “நாடெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகள், மற்றும் பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ஆனேன் மூலம் நடைபெறாது.   அனைத்து தேர்வுகளையும் நேரடியாக நடத்த வேண்டும்.   நேரடி எழுத்துத் தேர்வுகளை கொரோனா தடுப்பு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.