இந்தியாவை சேர்ந்தவர் அஜித். இவர் எலெக்ட்ரிஷியன் வேலைக்காக கடந்த 7 மாதங்களுக்கு முன் கத்தார் சென்றார். இவர் தற்போது வருத்தப்படும் நிலையில் உள்ளார். இவரை போல் கத்தாரில் உள்ள பல வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

அவருக்கு வேலையை பற்றி மட்டும் கவலை இல்லை. அங்கு உணவு விலையை நினைத்தும் கவலை ஏற்பட்டுள்ளது. ‘‘தற்போது உள்ள நிலை இதேபோல் நீடித்தால் எங்களை போன்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உணவு விலை மேலும் அதிகரிக்கும். இதனால் எங்களுக்கு வேலையும் இருக்காது’’ என்றார்.

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இணைந்து கத்தாரை தனிமைப் படுத்திவிட்டது. டோகாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. அஜித்துக்கு மாத சம்பளம் ஆயிரம் ரியால். இதில் 600 ரியால் வீட்டிற்கு அனுப்புவார். பணம் அனுப்புவதை நீண்ட நாட்கள் தொடர முடியாது என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

‘‘சில சூப்பர் மார்கெட்களில் அரசி, தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ரியால் செலவிட வேண்டி இருந்தது. தற்போது இது இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி ஒரு வேளை உணவை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்‘‘ என்றார் அஜித்.

அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளால் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த நாடு தற்போது கொந்தளிப்பு மிகுந்த பகுதியாக உள்ளது. தெற்காசியாவை சேர்ந்த 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால் இவர்கள் தான் முதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்திய நாடுகளின் செயல்பாட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அஜித் போன்ற தொழிலாளர்களுக்கு வசதிகள் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் உணவு விலை உயர்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணி பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக கூடுதல் நேரம் வேலை செய்யும் நிலை உருவாகலாம். மேலும், இங்கு வேலையில்லை என்ற வார்த்தைகள் அதிக அளவில் ஒலிக்க தொடங்கிவிட்டது.

பங்களாதேஷை சேர்ந்த அனில் என்பவர் கூறுகையில்,‘‘ ஒரு கிலோ ஆப்பிள் 7 ரியாலுக்கு விற்கப்பட்டது. தற்போது 18 ரியாலாக உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் எங்களை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது’’ என்றார்.

இவர் மாதம் 820 ரியால் சம்பாதிக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் தனது 2 மகள்களை படிக்க வைத்து வருகிறார். இது பாதிக்கும் என்று அச்சம் கொண்டுள்ளார்.

‘‘ரமலான் நோன்பு காரணமாக ஏற்கனவே பணியாற்றும் நேரம் குறைந்துள்ளது. இதனால் பண பற்றாகுறையை தீர்க்க கூடுதல் நேரம் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்காலிக பிரச்னை தான். எனினும், கத்தார் மீதான தடை காரணமாக பொருளாதார தாக்கம் ஏற்படாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.