டில்லி,

துணைஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரு அணிகளும் டில்லியில் மோடி தலைமையில் மீண்டும் இணையும் என்று பரபரப்பாக செய்திகள் பரவி வந்த நிலையில், அப்படி எந்தவொரு தகவலும் வரவில்லை என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இரு  அணிகள் இணைப்பு குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை  என்று கைவிரித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் ஆதரவாளராக ஏற்கெனவே மாற்றிவிட்ட பி.ஜே.பி அரசு, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து, கட்சியின் இரு அணிகளையும் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாகவே, நேற்று, கட்சி மற்றும் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வரும் தினகரனை கட்சியை விட்டு நீக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஓபிஎஸ் அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில்,  இரு அணிகளும் டில்லியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது ஓபிஎஸ் இணைவது குறித்து தகவல் இல்லை என்று கைவிரித்துள்ள நிலையில், இரு அணிகளும்  இணைய டில்லியில் ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும் இன்று டில்லி இருக்கிறார். டில்லியில் இருவரும் இடையே மோடி சமரசம் செய்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.