விடுமுறை கிடையாது: மே மாதம் முழுவதும் கிண்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்

Must read

சென்னை:

கோடை விடுமுறையையொட்டி  இந்த மாதம்  முழுவதும் விடுமுறையின்றி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவும் செயல்படும் என தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு செவ்வாய்கிழமை  தோறும் வார விடுமுறை விடப்படும். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள்  பள்ளி மாணவர்கள், பெற்றோர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, இந்த மாதம் முழுவதும்  செவ்வாய்க்கிழமைகளான 15, 22, 29 ஆகிய தேதிகளில் இரு பூங்காக்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

இவ்வாறு வனத்துறை அறிவித்து உள்ளது.

More articles

Latest article